பாபாவின் ஆரத்தியை தினமும் பாடி, அவருடைய பாதங்களில் சரணடையும் பக்தர்களுடைய நெஞ்சத்தையும் மனத்தையும் உடலையும் பாபா வழிநடத்தி, அவர்களுடைய ஆத்மாவை, அவர்களுடைய நெஞ்சத்திலிருந்தும் மனத்திலிருந்தும் உடலிலிருந்தும் உள்முகமாக வேறுபடுத்தி ஆத்ம அனுபவம் பெறச்செய்கிறார். இதனால், இம்மையில் இந்த பக்தர்களுடைய வாழ்க்கை அனுபவத்தரம் உயர்வதோடு, மறுமையில் இறைஞானம் பெற்று ஆன்மீகப் பிரபஞ்சத்தைக் கண்டு இறையுலகில் இனிது வாழ்கின்றனர் என்பதில் ஐயமில்லை.
~ உமாஸ்ரீதாஸன்.
*****

*****
சீரடி ஸாயி பாபா - காலை ஆரத்தி
மொழிபெயர்ப்பு: புலவர் நாக. சண்முகம்
கணேசா ஸ்வாமி
கரங்குவித்துத் துதிக்கிறோம்
ஆரத்தி பாடுதற்கு
சீரடி ஸாயி பகவான் ஆரத்தி பாடுதற்கு
அருள்புரிய வேண்டுமய்யா
கற்பகமே அற்புதமே கணபதியே சரணமையா
பிரிவு - 1
கரங்களைக் குவித்து உம் பாதங்களில்
தலையினை வைத்து வணங்குகிறோம்
எங்கள் வேண்டுதலைக் கேட்டருள்வீர் ஸாயி நாதரே
பக்தியுடனும் இல்லாமலும் உமது
இடம்நாடி வந்துள்ளோம் - எமக்கு
உமது அருளைத் தந்தருள்வீரே ஸத்குரு
நாதா
என்றும் உமது திருப்பாதங்களை ஸேவிக்கவேண்டுமப்பா
கருணை காட்டி எமக்கு உமது அருளைத் தாருமய்யா
துக்காராம் வேண்டுகிறார் எமது நாமஜபம்
கேட்டு
அருள்கூர்ந்து எம் ஸம்ஸாரப் பற்றை நீக்கிடுங்களே
கரங்களைக் குவித்து உம் பாதங்களில்
தலையினை வைத்து வணங்குகிறோம்
எங்கள் வேண்டுதலைக் கேட்டருள்வீர் ஸாயி நாதரே